நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நிவாரண உதவிப் பொருள்கள், வெட்டிவேரிலானா மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசியப் பசுமைப்படை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வெட்டிவேர் மாஸ்கையும், அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களையும், 50க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு வழங்கினார்.
முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினம் இன்று(ஜூன்.5) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டும், பெற்றோர்களுக்கு இலவச மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.