ETV Bharat / state

உலக யானைகள் தினம்: அசைந்தாடும் அதிசயம்... யானைகளை கண்டால் குழந்தைகள் குதூகலம்...

author img

By

Published : Aug 12, 2022, 7:34 AM IST

கோயில் கட்டுவதற்கு யானைகள் மிகவும் உதவியுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அனைத்து கோயில்களிலும் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் நடத்த வேண்டும் என்பது வனவிலங்கு ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

உலக யானைகள் தினம்: அசைந்தாடும் அதிசயம்... இதை கண்டால் குழந்தைகள் குதுகலம்...
யானைகள் தினம்: அசைந்தாடும் அதிசயம்... இதை கண்டால் குழந்தைகள் குதுகலம்...

யானைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் பண்பாட்டோடும் பண்டிகைகளோடும் கலந்து விட்டவை. பலமிக்க யானை அன்பிற்கு கட்டுபட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையின் அன்பை பெற, ஆசியை பெற ஆசைப்படுவதுண்டு. நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினமான யானைகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஆகஸ்ட் 12 யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டிருப்போம். திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது முன்னே அழகாக அசைந்தாடி வரும் யானையின் அழகை காணக் கண் கோடி வேண்டும். தமிழர்களுக்கும் யானைகளுக்கும் இடையே பிரிக்க முடியாத உறவு காலம் காலமாக இருந்து வருகிறது.

உலக யானைகள் தினம்: அசைந்தாடும் அதிசயம்... இதை கண்டால் குழந்தைகள் குதுகலம்...

மதுரை மீனாட்சியின் அரசாட்சி குறித்து பாடும் 'அல்லி அரசாணி மாலை' என்ற பாடல் தொகுப்பில் 'மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை' என்று பாடப்பட்டுள்ளது. மன்னர்கள் காலத்தில் யானை படை மிக முக்கியமானதாக கருதப்பட்டது. பெரிய கோவில்களை கட்டுவதற்கு யானைகள் பல உதவிகள் செய்துள்ளன. யானைகள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றளவும் யானைகளை கோவில்களில் வைத்து பராமரித்து வருகிறோம்.

அதேபோல தனியார் சிலரும் யானைகளை பராமரித்து வருகின்றனர். அதேபோல நாடாளும் அரசனை தேர்ந்தெடுக்கவும், யானைகளை விட்டு மாலை போடும் வழக்கமும் அந்த காலத்தில் இருந்தது. வளர்ப்பு யானைக்கும், அதன் பாகனுக்கும் இடையேயான உறவு மகத்தானது.

யானைகள் இலை, செடி, கொடி, மூங்கில், கரும்புகளை விரும்பி உண்ணும். தினமும் 200 லிருந்து 250 கிலோ இலை, தழைகளையும், 150 லிருந்து 200 லிட்டர் வரை தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளிடம் ஆசீர்வாதம் வாங்குவதன் மூலம் தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

யானை காலடி மண்ணை பூஜைக்கு பயன்படுத்துவது வழக்கம். யானைகள் இருக்கும் கோயில்களில் யானைகளை இறைவனாக நினைத்து அவற்றுக்கு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீர் அடங்கிய கலசத்தை யானை மீது வைத்து கொண்டு வரும் வழக்கம் காலம் தொட்டு இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யானைகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக கோவில்களில் குறைந்து வருகிறது. மயிலாடுதுறையை சுற்றியுள்ள கோயில்களில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருந்த நிலையில், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டு யானைகள் மட்டுமே உள்ளன. சமீபத்தில் மத்திய அரசு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதில், யானைகளை வாங்கவும் விற்கவும் அனுமதி அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களுக்கு விரைவில் யானைகள் வரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு உலக யானைகள் தினத்திற்குள் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான திருக்கோவில்களுக்கு யானைகள் வரவேண்டும் என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது, யானைகளுக்கு மகிழ்ச்சியளித்து வந்ததாகவும் யானைகள் புத்துணர்வு முகாமை தொடர்ந்து நடத்தி யானைகளை பாதுகாக்க வேண்டும் என்று யானை பாகன்கள் யானை பிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச புலிகள் தினம்: காட்டின் பாதுகாவலனை காத்திடுவோம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.