மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் கிராமத்தில் வசித்துவருபவர் புனிதா. இவர் அரசு தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கூரை இடிந்து விழுந்தது. இதில் புனிதாவின் தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டாரம் முழுவதும் உள்ள அரசின் தொகுப்பு வீடுகள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
அதில் வசிக்கும் மக்கள் உயிர் பயத்துடன் உள்ளனர். இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்காட்டுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தொகுப்பு வீடுகளை மறுசீரமைப்பு செய்துதர வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காட்டெருமைத் தாக்கி மூதாட்டி படுகாயம்!