நாகப்பட்டினம் மாவட்டம், புத்தகரம் முடிகொண்டான் ஆற்றில் பழுதடைந்துள்ள புத்தகரம் நீர்த்தேக்கத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்துப் பணிகளை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட 1,829 குடிமராமத்து பணிகள் செய்வதற்காக அரசு சுமார் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" என்றார்.
கரோனா முன்னேற்பாடுகளில் தொய்வு இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், நலமுடன் இருப்பவர்களுக்கு பரிசோதனை எதற்கு?" என்றார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் உருவாகும்’ - அமைச்சர் காமராஜ்!