ETV Bharat / state

'எம்எல்ஏக்களின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்' - methane protest

நாகை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்பதற்கு எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

'எம்எல்ஏக்களின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்'-பேராசிரியர் த.ஜெயராமன்
author img

By

Published : May 20, 2019, 9:08 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது.

பின் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது, "ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் மே 28ஆம் தேதி முதல் கிராமங்களுக்கு சென்று பரப்புரை ஆற்ற உள்ளோம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோகார்பனை எதிர்க்கக்கூடிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி ஒன்றாக போராடப் போகிறோம்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மக்களவை, சட்டப்பேரவையில் குரலெழுப்ப வேண்டும். இல்லையெனில் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

மேலும் உயர் நீதிமன்ற அனுமதியுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி மயிலாடுதுறையில் காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம்" என தெரிவித்தார்.

'எம்எல்ஏக்கள் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்'-பேராசிரியர் த.ஜெயராமன்

Intro:ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுப்பதற்கு எம்பி, எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒவ்வொரு ஹைட்ரோகார்பன் கிணறுக்கும் வாரம்தோறும் நீரியல் விரிசல் முறையில் நிலத்தடி பாறையை நொறுக்க, குறைந்தது ஒரு கோடி லிட்டர் நீர் தேவை. ஏற்கனவே தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது ஓஎன்ஜிசி 2016 ஆம் ஆண்டு முன் அமைத்துள்ள அத்தனை கிணறுகளையும் ஹைட்ரோகார்பன் ஒற்றை லைசென்ஸ் பெற்று அனைத்து ஹைட்ரோ கார்பன் களையும் எடுக்கும் கிணறுகளாக மாற்றுவதற்கு இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. கிணறுகள் அமைக்க விளைநிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பிடுங்கப்பட இருக்கின்றன. மீனவர்கள் கடலில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட இருக்கிறார்கள் ஹைட்ரோகார்பன் ஏல திட்டப்படி புதுச்சேரி காரைக்காலில் 41 ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமையும் என்ற நிலையில் அதை அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் 4038 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கிணறுகள் அமைய இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மௌனமாக இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. உடனடியாக தமிழக அரசு இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியது:- ஹைட்ரோகார்பன் திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மே 28ஆம் தேதி முதல் கிராமங்கள் உழவுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளோம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பனை எதிர்க்கக்கூடிய அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் பேரழிவு திட்டங்களுக்கு நிலம் தர கூடாது என்று வலியுறுத்தி விவசாயிகள் நிலம் தர மறுக்கும் இயக்கத்தை தொடங்க உள்ளோம் இத் திட்டத்தை தடுத்து நிறுத்த எம்பி எம்எல்ஏக்கள் மக்களவை சட்டப்பேரவை யில் குரலெழுப்ப வேண்டும் இல்லையெனில் அவர்களது வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் உயர் நீதிமன்ற அனுமதியுடன் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆகஸ்ட் 17ஆம் தேதி மயிலாடுதுறையில் காவிரிப்படுகை பாதுகாப்பு மாநாடு நடத்த இருக்கிறோம் என்றார்.
பேட்டி:- பேராசிரியர் த.ஜெயராமன். (மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.