மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 342 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்நிலையில் கூறைநாடு பகுதியில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தின் முன்பு பாதாள சாக்கடை குழாய் வழியாக கழிவு நீர் வெளியேறி வழிந்தோடி வருகிறது.
இங்கு வாக்களிக்க வரும் மக்கள் கழிவு நீரை தாண்டியே வாக்குப்பதிவு மையத்தின் உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நகராட்சியிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தற்காலிகமாக கழிவுநீர் தேங்குவது சரிசெய்யப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தொற்று ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் முழு ஊரடங்கா? - ராதாகிருஷ்ணன் பதில்