புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் ஐந்து மாத காலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை (Dark room) திறக்கப்பட்டது.
தொடர்ந்து அங்கிருந்த 378 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 200 கண்ட்ரோல் யூனிட்கள், 196 VVPAT இயந்திரங்கள் ஆகியவைகளின் நிலை குறித்து இன்றுமுதல் பரிசோதிக்கப்படுகிறது. இதற்காக பெல் கம்பெனியிலிருந்து நான்கு பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில்தான் நடைபெறுகிறது.