நாகப்பட்டினம்: தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என, பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாத நிலையில் மனம் தளராமல் படித்து பிளஸ்2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மயிலாடுதுறையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி லட்சுமிக்கு வி.கே.சசிகலா தொலைப்பேசியில் வாழ்த்து வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான அன்பகம் காப்பகத்தில் கடந்த 16 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வரும் லட்சுமி என்ற இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
இதையறிந்த வி.கே.சசிகலா தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு காப்பக நிர்வாகி கலாவதி மற்றும் வெற்றி பெற்ற மாணவி லட்சுமி ஆகியோரிடம் உரையாடினார். லட்சுமியிடம் பேசி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த சசிகலா, தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் விரைவில் நேரில் வந்து மாணவியைப் பார்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது - காவல் துறைக்கு ஓபிஎஸ் மனு