மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (90). இவருக்கு சொந்தமான மாடுகள் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. மாட்டினை ஓட்டிவர மாரிமுத்து ஆற்றில் இறங்கி சென்றபோது, அதிக நீரோட்டம் காரணமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
நீண்ட நேரமாக வீட்டிற்கு மாரிமுத்து வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் அவரை தேடி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தேடும்போது, அதே ஊரை சேர்ந்த சங்கர் (33) என்பவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இருவரது உடல்களையும் கிராம மக்கள் தேடிவருகின்றனர்.
இதற்கிடையில் அரசு தீயணைப்புதுறை மூலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரது உடல்களையும் மீட்டுத் தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்... தவித்த நின்ற மக்களுக்கு படகு வசதி ஏற்படுத்தி தந்த எஸ்பி!