மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகா திருநகரி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தை மாத பிறப்புக்கு முதல் நாள் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அதனையொட்டி நடந்த நகை திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஒரு சமூகத்தைச் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்பதால் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினரின் ஜாமீனோடு தை 2-ம் தேதி விட்டுள்ளனர். அன்று முதல் அக்கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தை இரண்டாம் தேதியினையே பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
தை 1-ம் தேதி பொங்கலிட்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதால் தை 2-ம் தேதியில் பொங்கல் விழாவாக கடந்த மூன்று தலைமுறைகளாக கிராம மக்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் தை மாதம் இரண்டாம் தேதியான இன்று(ஜன.16) திருநகரி கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக தங்கள் வீடுகளின் முன்பு மறைப்பு ஏற்படுத்தி, விளக்கேற்றி, பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையல் இட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தஞ்சை பெரிய கோயிலில் நந்திக்கு 1 டன் காய்கறிகள் அலங்காரம்; மகர சங்கராந்தியையொட்டி சிறப்புப் பூஜை