ETV Bharat / state

ஆற்றைச் சுற்றி வரும் முதலைகள்; அச்சத்தில் கிராம மக்கள்! - PeoplemWants Forest Department to Take Action

நாகை: மயிலாடுதுறை அருகே உள்ள திருக்குரகாவல் கிராமத்தில் இருக்கும் பழவாற்றில் மூன்று முதலைகள் இருப்பதால், கிராம மக்கள் ஆற்றைப் பயன்படுத்துவதற்கு அச்சம் அடைந்துள்ளனர்.

village-people-in-fear-for-crocodiles-in-river
village-people-in-fear-for-crocodiles-in-river
author img

By

Published : Dec 11, 2019, 4:09 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரகாவல் கிராமத்தின் வழியே பழவாறு செல்கிறது. கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மழை குறைந்ததைத் தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

திருக்குரகாவல் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகே உள்ள பழவாற்றுக் கரையோரம் உள்ள பகுதியில் மூன்று முதலைகள் அடிக்கடி சுற்றிவருகின்றன. இதனால் அப்பகுதியில் யாரும் ஆற்றில், இறங்கி குளிக்க முடியாமலும், கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கோ, தண்ணீர் குடிக்கவிடவோ முடியாமலும் தவித்து வருகின்றனர்.

முதலைகளால் அச்சத்தில் கிராம மக்கள்

அப்பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு முதலைகள் இருந்ததாகவும் தற்போது முதலைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகவும் பொது மக்கள் கூறியுள்ளனர். எனவே முதலைகளால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, முதலையைப் பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தெருவில் சுற்றித் திரிந்த 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது!

Intro:மயிலாடுதுறை அருகே திருக்குரகாவல் கிராமத்தில் 3முதலைகள் பழவாற்றில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம்:-Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரகாவல் கிராமத்தின் வழியே பழவாறு செல்கிறது. கடந்த சிலவாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஒடியது. தற்போது மழை குறைந்ததை தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருக்குரகாவல் பிரிதிபெற்ற ஆஞ்சநேயர்கோயிலுக்கு அருகே உள்ள பழவாற்று கரையோரம் உள்ள பகுதியில் மூன்று முதலையில் அடிக்கடி சுற்றி வருகிறது. இதனால் அப்பகுதியில் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஆஞ்சநேயர்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். அப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஆற்றில் கால்நடைகளை குளிப்பட்டவே, தண்ணீர் குடிக்கவிடவோ விடமுடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு முதலைகள் இருந்ததாகவும் தற்போது இனப்பெருக்கம் மூலம் மூன்று முதலைகளால் அதிகரித்து உள்ளதாக தெரிவித்தனர். எனவே முதலைகளால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு முதலையை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட அரசும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : நடராஜன், ஆஞ்சநேயர்கோயில் சிவாச்சாரியார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.