ETV Bharat / state

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடி, உதை! - தமிழ் குற்றச்செய்திகள்

நாகை: வேளாங்கண்ணி அருகே மணல் திருட்டை தடுக்கச்சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

village-administration-officials-kicked-out-for-sand-smuggling

author img

By

Published : Aug 21, 2020, 7:19 PM IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த கருவேலங்கடை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் அருள்அரவிந்தன், மகாதானம் கிராமத்தின் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மகாதானம் பகுதியிலுள்ள வயல் வெளியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சட்ட விரோதமாக மணல் திருடப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணையில், கலசம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது செங்கல் சூலைக்கு மணல் கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராக்டரை மடக்கிப் பிடித்த கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர்கள் சபரி நாதன், கருப்பசாமி ஆகியோரை உதவிக்கு அழைத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்யும்படி வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னார் மூன்று கிராம நிர்வாக அலுவலர்களும் இணைந்து டிராக்டரை பறிமுதல் செய்ய முற்பட்ட போது, அங்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், அரசு அலுவலர்கள் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை அந்த அலுவலர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து வேளாங்கண்ணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாகவே, அந்த கும்பல் டிராக்டரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருள் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர், தப்பியோடிய பாலகிருஷ்ணன், நாகமணி, நவநீதகிருஷ்ணன், சதீஷ்குமார், சுப்பிரமணியன், ராமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணல் திருட்டில் ஈடுபடுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடி, உதை

மணல் திருட்டை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.