நாகப்பட்டினம்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்திவரும் கடும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துவருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றுவரும், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவரது மகள் வின்சியா உருக்கமாகப் பேசி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவிவருவதாகக் கூறியுள்ள வின்சியா, குடியிருப்புகளின் சுரங்கங்கள், சுரங்கப்பாதை, மெட்ரோ போன்ற இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் தங்கி இருப்பதாகவும், உணவு இல்லாமல் தவித்துவருவதாகவும் கூறியுள்ளார்.
கொட்டும் பணியில் நின்று காணொலி வெளியிட்டுள்ள அவர், தான் தங்கியிருக்கும் பகுதியில் சிக்கியுள்ள எட்டாயிரம் இந்திய மாணவர்களையும், உக்ரைன் நாடு முழுவதுமுள்ள 20 ஆயிரம் இந்திய மாணவர்களையும் மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஊருக்கு நீ உழைத்தால் வெற்றி நிச்சயம்!