நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமை உடையது.
இதன் ஆண்டு பெருவிழா 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 10 நாட்களும் இரவு நேரங்களில் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று சப்பர பவனி எனப்படும், தேர்பவனி நடைபெற்றது.
புதுக்கோட்டை மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து அடிகளார் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டு பிராத்தனை உள்ளிட்டவை நடைபெற்றது.மேலும், மின்விளக்குகளால் அலங்ரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார், சூசையப்பர், சவேரியார், ஆரோக்கியமாதா உள்ளிட்ட சொருபங்களை பெண்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.