நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி செபஸ்தியார் நகரில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் உபகோவிலான, பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய திருத்தேர் பவனி நேற்று நடைபெற்றது.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மைக்கேல் ஆண்டவர், செபஸ்தியார், சூசையப்பர் எழுந்தருளி செபஸ்தியார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது. முன்னதாக வேளாங்கண்ணி அருத்தந்தை பிரபாகர் தலைமையில் சிறப்புத் திருப்பலி, செபமாலை, நவநாள் ஜெபம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பேராலய பங்குத் தந்தை சூசைமாணிக்கம் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.