நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம். கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய, இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் ஐந்தாம் நாளான நேற்று (செப். 3) தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக, அருட்தந்தை ஆரோன் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனைகளுடன், புனிதம் செய்யப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் சப்பரத்தில், மைக்கில் சம்மன்சு, சூசையப்பர், ஆரோக்கியமாதா ஆகிய 3 சொருபங்கள் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன.
கரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் இன்றி அருட்தந்தையர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வேளாங்கண்ணி பேராலயம் திறப்பு: பக்தர்கள் தரிசனம்