பிரான்ஸ் நாட்டு சிறுமிக்கு அன்னை மரியாள் காட்சியளித்த தினத்தை உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமலோற்பவ அன்னை திருவிழாவாக கொண்டாடிவருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நேற்று சிறப்பு தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை சூசை மாணிக்கம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை புனிதம் செய்து தொடக்கிவைத்தார்.
பேராலயத்தின்கீழ் கோயிலில் இருந்து தொடங்கி நான்கு முக்கிய வீதிகளில் வலம்வந்த தேரை பக்தர்கள் தோளில் சுமந்தபடி மரியே வாழ்க என்ற முழக்கத்துடன் ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பிராத்தனை செய்தனர்.
இதையும் படிங்க...தெலங்கானா என்கவுன்டருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு!