ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்கக் கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்! - ஆளூர் ஷாநவாஸ்

VCK Protest: நாகப்பட்டினத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவித்து, 21 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்கக் கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 11:17 AM IST

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் கடந்த மாதம் பெய்த அதி கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பை தீவிர பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், வெள்ள நிவாரண உதவிக்காக 21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் மத்திய அரசு பேரிடர் மாநிலமாக அறிவிக்க மறுப்பு தெரிவித்து கேட்ட தொகையை வழங்காமல் இருந்து வருகிறது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தியும், 21 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும், வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தை கைவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன்படி நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் முன்பு விசிக மாவட்டச் செயலாளர் நாக.அருட்செல்வன் தலைமையில் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்பட 100க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு கேட்ட 21 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பழைய முறைப்படி வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: நாகை அருகே படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.