ETV Bharat / state

சவுடு மண் குவாரியை மூடக்கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம் - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்: சவுடு மண் குவாரியை மூடக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை கோட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Loamy soil
VCK party protest
author img

By

Published : Jul 23, 2020, 6:17 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இயங்கிவரும் சவுடு மண் குவாரியை மூடக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சவுடு மண் குவாரியால் நெப்பத்தூர் கிராமத்தைச் சுற்றி நிலத்தடி நீர் பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுவதால் உடனடியாக குவாரியை மூடக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், நேற்று (ஜூலை 22) 7ஆம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'கருகும் குறுவை நெற்பயிர்; சம்பா சாகுபடியும் கேள்விக்குறி' - பி. ஆர். பாண்டியன் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.