மயிலாடுதுறை: மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலை எழுச்சியின் காரணமாக நான்கு கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீர்காழி தாலுக்கா மடவாமேடு கிராமத்தில் புயல் மற்றும் கடல் சீற்றத்தின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சென்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் உடன் சென்றார். கடற்கரையோரம் ஆய்வு மேற்கொண்டபோது கடல் சீற்றத்தின் காரணமாக ஏற்பட்ட அலையில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரம்: எந்தெந்த பகுதிகளில் பஸ் இயங்காது தெரியுமா?