ETV Bharat / state

பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் - காலில் விழுந்த மணல்மேடு பேரூராட்சி ஊழியர்

மயிலாடுதுறை: முகக்கவசம் அணியாமல் சாலையில் சுற்றித் திரிந்தவர்களிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பேரூராட்சி ஊழியர் காலில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார்.

முகக்கவசம்
பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் - காலில் விழுந்த மணல்மேடு பேரூராட்சி ஊழியர்
author img

By

Published : May 23, 2021, 9:24 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் 40 பேருக்குக் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற மணல்மேடு பேரூராட்சி சார்பில் தினந்தோறும் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் வலியுறுத்தி வருகின்றன. மேலும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற பொதுமுடக்கத்தை அறிவித்தது.

பொதுமக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்தல் - காலில் விழுந்த மணல்மேடு பேரூராட்சி ஊழியர்

இதனால், மணல்மேடு பேரூராட்சியில் கடைகள் திறக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் முண்டியடித்தனர். அப்போது, முகக்கவசம் அணியாமல் கடைவீதிக்கு வந்தவர்களை மணல்மேடு பேரூராட்சி பொது சுகாதார மேற்பார்வையாளர் சாமிநாதன் என்பவர் தடுத்து நிறுத்தி, ஏன் முகக்கவசம் அணியவில்லை என்று கேள்வி எழுப்பி, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களின் கால்களில் விழுந்து, கைகூப்பி, வணங்கி முகக்கவசத்தை வழங்கி அணிந்து கொள்ளச் செய்தார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.