மயிலாடுதுறை மாப்படுகை அருகே அமைந்துள்ள லேத் வெல்டிங் பட்டறை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கடந்த டிசம்பர் 14ஆ தேதி திருடிச் சென்றனர்.
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரை சேர்ந்த விவசாயி ராமபிள்ளை, லேத் வெல்டிங் பட்டறையில் பழைய டிராக்டர் விற்பனைக்கு உள்ளதை அறிந்து பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்தக் கடைக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை (பல்சர்) பூட்டாமல் உள்ளே சென்றிருக்கிறார்.
பட்டறைக்கு உள்ளே சென்றவர் மீண்டும் வந்து பார்ப்பதற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றனர். தனது வாகனம் கடைக்கு வெளியே இல்லாததை அறிந்த ராமபிள்ளை, பட்டறையில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவே சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டன.
அதில் ராமபிள்ளையை பின்தொடர்ந்து வந்த இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்தக் காட்சிகளை மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சமர்ப்பித்து, ராமபிள்ளை புகாரளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள்: அறிவுரை வழங்கிய நம்மவர் கமல்!