ETV Bharat / state

கோலமாவில் 30 அடி நீள பிரமாண்ட தேசியக்கொடி - சகோதரிகளுக்கு பாராட்டு!

சீர்காழி அருகே குடியரசு தினத்தையொட்டி, இரு சகோதரிகள் தங்கள் வீட்டில் கோலமாவை வைத்து 30 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்ட பிரமாண்டமான தேசியக்கொடியை வரைந்து அசத்தினர்.

national_flag
national_flag
author img

By

Published : Jan 26, 2023, 8:29 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான கயல்விழியும் வினோதினியும் சிறுவயது முதலே கோலம் போடுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இவர்கள் கடந்த மார்கழி மாதம் முழுவதும் தங்கள் வீடுகளின் முன்பு விதவிதமான கோலங்கள் வரைந்து அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்நிலையில் இவர்கள் குடியரசு தினத்தையொட்டி இன்று(ஜன.26) தங்கள் வீட்டில் 30 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் பிரமாண்டமான தேசியக்கொடியை வரைந்து அசத்தியுள்ளனர். ஆரஞ்சு, வெள்ளை, பச்சை உள்ளிட்ட கலர் கோலமாவுகளை பயன்படுத்தி நேர்த்தியாக வண்ணம் தீட்டியுள்ளனர்.

மரம் வளர்ப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் "மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்" எனும் வாசகத்தையும் அதில் எழுதியுள்ளனர். இதனை வரைய சுமார் ஏழு மணி நேரம் ஆனதாக சகோதரிகள் தெரிவித்தனர். இந்த பிரமாண்ட தேசியக்கொடியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க: ஜூடோ பயிற்சி சென்ற மாணவர் சடலமாக மீட்பு... பிட் அடித்து மாட்டியதால் தற்கொலையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.