திருச்சி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பாலகிருஷ்ணனும், அவரது நண்பரான, காஞ்சிபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த திலக்சனும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கள்ளத்தோணி மூலம் தப்பிச்செல்ல முடிவெடுத்தனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் மற்றும் சந்திரன் ஆகியோரின் உதவியை நாடியுள்ளனர்.
இதனையடுத்து, அகதிகளிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட மீனவர்கள் இருவரும் நாகப்பட்டினம் மாவட்டம் நாலுவேதபதி கடற்கரைக்கு அகதிகளை வரவழைத்து பைபர் படகில் ஏற்றிக்கொண்டு இலங்கை சென்றனர். பின்னர், இலங்கையில் இறக்கிவிட்டு மீனவர்கள் இருவரும் திரும்பினர். இந்நிலையில், இலங்கை கடற்படை வீரர்கள் அகதிகள் இருவரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், இருவரும் தமிழ்நாடு அகதிகள் முகாமிலிருந்து இலங்கைக்கு தப்பி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து இலங்கை தூதரக அலுவலர்கள், இந்தியாவிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்கவே, விசாரணையில் இறங்கிய தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர், நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வாணன், சந்திரன் ஆகிய இரு மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு தொடக்கம்!