ETV Bharat / state

இரண்டரை வயது குழந்தை வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு - Searching for Son in Ranjita Canal

சீர்காழி அருகே ஆதார் அட்டை எடுக்க தாயுடன் சென்ற இரண்டரை வயது குழந்தை வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டரை வயது குழந்தை வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு!

author img

By

Published : Oct 17, 2022, 10:02 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஆச்சாள்புரம் - செங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தனது மூன்றாவது குழந்தையான அமரனுக்கு இரண்டரை வயது ஆதார் அட்டை எடுப்பதற்காக கொள்ளிடம் ராசான் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள தபால் நிலையத்திற்கு தங்கள் உறவினருடன் ரஞ்சிதா சென்றுள்ளார்.

தபால் நிலையத்தில் ஆவணங்கள் பூர்த்தி செய்து கொண்டிருக்கும்போது உறவினர் மகன் மற்றும் அமரன் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அமரன் அருகில் இருந்த ராசான் வாய்காலில் விழுந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சிதா வாய்க்காலில் இறங்கி மகனை தேடியுள்ளார்.

தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அமரனை வாய்க்காலில் தேடியுள்ளனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு அனுமந்தபுரம் சட்டரஸ் பகுதியில் அமரன் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் குழந்தையின் உடலை மீட்டு கொள்ளிடம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

இரண்டரை வயது குழந்தை வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு!

மருத்துவர் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக கூறியதை அடுத்து கொள்ளிடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:காங்கிரஸ் தலைவர் தேர்தல்; தமிழகத்தில் 93% வாக்குபதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.