ETV Bharat / state

மூதாட்டி வீட்டில் கோபித்துக் கொண்டு 30 கி.மீ பயணம் - Elderly people should be cared for responsibly

வீட்டில் கோபித்துக் கொண்டு 30 கிலோமீட்டர் தூரம் நடந்து மயிலாடுதுறையில் சாலையில் வந்து சேர்ந்த 80 வயது மூதாட்டியை காவல்துறையினர் முன்னிலையில் குடும்பத்துடன் சமூக சேவகர்கள் ஒப்படைத்தனர்.

80 வயது மூதாட்டி வீட்டில் கோபித்துக் கொண்டு முப்பது கிலோமீட்டர் பயணம் -  உறவினர்களிடம் ஒப்படைப்பு

author img

By

Published : Aug 10, 2022, 10:29 PM IST

மயிலாடுதுறை: வாழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனம் (80). இவர், கணவர் மற்றும் மகனை இழந்த நிலையில் மருமகளுடன் வசித்து வருகிறார். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்சனையில் மன வருத்தத்தில் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு நடந்தே வந்து சேர்ந்துள்ளார். சாலையில் செல்வோர் வாங்கித் தரும் உணவை அருந்திவிட்டு சாலையிலேயே படுத்து உறங்கி வந்தார்.

இவரது நிலைமையை கண்ட மயிலாடுதுறை சமூக சேவகர்கள், இவரிடம் விசாரித்து பெரம்பூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நிர்வாகி பாரதி மோகன் என்பவருக்கு புகைப்படத்தை செல்போனில் அனுப்பி உள்ளனர். இவரது சொந்த கிராமத்திற்கு சென்று விசாரித்த போது கடந்த மாதம் முதல் பேரனை பார்க்கச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் அது முதல் பல்வேறு இடங்களில் தாங்கள் தேடி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

80 வயது மூதாட்டி வீட்டில் கோபித்துக் கொண்டு முப்பது கிலோமீட்டர் பயணம் - உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதனை அடுத்து குடும்பத்தினரை அழைத்து வந்து மூதாட்டிக்கு சேலை துணிமணிகள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றை ஒப்படைத்த சமூக சேவகர்கள், வயதானவர்களை பொறுப்புடன் கவனித்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். அதனை தொடர்ந்து பேரும் காவல்துறையினர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் பதவியை மீண்டும் உருவாக்கியது ஏன்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.