ETV Bharat / state

சந்திர கிரகண தினத்தில் வேப்பமரத்தில் வடிந்த பால்: பொதுமக்கள் பக்திப்பரவசத்துடன் வழிபாடு - வேப்பமரத்தில் பால் வடிந்தது

பௌர்ணமி தினமான இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை அருகே வேப்பமரத்தில் திடீரென பால் வழிந்ததால் பொதுமக்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

கிரகண தினமான இன்று வேப்பமரத்தில் பால் வடிந்தது

author img

By

Published : Nov 8, 2022, 8:05 PM IST

மயிலாடுதுறை: சோழம்பேட்டை கிராமத்தில் கார்த்தி என்பவரது வீட்டின் பின்புறத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வேப்பமரம் அமைந்துள்ளது. சுமார் பத்து அடி உயரமுள்ள இந்த வேப்ப மரத்தில் இன்று காலை திடீரென பால் வடிந்துள்ளது.

மரத்தின் உச்சியில் இருந்து பால் வடிந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் பக்திப் பரவசத்துடன் பார்க்க குவிந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி பூக்களிட்டு தீபாராதனை செய்தனர். பின்னர் கிராம மக்கள் படையெடுத்துச்சென்று வேப்ப மரத்தினை ஆச்சரியமுடன் பார்த்து வழிபட்டு வருகின்றனர்.

சந்திர கிரகணத்தில் வேப்பமரத்தில் வடிந்த பால்: பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு

திடீரென்று நிகழ்ந்த இந்த அதிசய நிகழ்வைக் காண்பதற்கு, சோழம்பேட்டையினைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வரத் தொடங்கியுள்ளனர். பௌர்ணமி தினமான இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ள நிலையில் வேப்ப மரத்தில் பால் வடிவதால் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

இதையும் படிங்க: தொடர் மழை: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.