ETV Bharat / state

இஸ்லாமியர்களின் நண்பராக மோடி இருக்கிறார்: பாத்திமா பாபு புகழாரம்...! - AIADMK

நாகப்பட்டினம்: இஸ்லாமியர்களின் நண்பராக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு புகழாரம் சூட்டியுள்ளார்.

பாத்திமா பாபு
author img

By

Published : Apr 9, 2019, 7:57 AM IST

மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரையால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ”அதிமுக, பாஜக இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் தொழுகை இடங்களில் வெடிகுண்டு வைத்து நாச வேலை செய்த தீவிரவாத கும்பலை அந்த நாட்டிற்கே சென்று அழித்தது மோடி ஆட்சியில்தான். இஸ்லாமியர்களின் நண்பராக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுகவின் வெற்று வாக்குறுதிகளை நம்பி விடவேண்டாம். ஜெயலலிதா எழுதி வைத்து படிக்கிறார் என்று கிண்டல் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது எழுதி வைத்தாலே படிக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.

இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததற்கு காரணம் திமுக என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. தமிழக மக்களுக்கு சீராக மின்சாரத்தைக்கூட வழங்காத திமுகவிற்கு தமிழக மக்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார்கள்” என்றார்.

Intro:திமுகவின் வெற்று வாக்குறுதிகளை நம்பாதீர்கள், மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசை மணி ஆதரித்து பாத்திமா பாபு பிரச்சாரம்:-

Body:மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பாத்திமா பாபு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக, பாஜக இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற நலத் திட்ட உதவிகளை வழங்கியுள்ளது. மாணவர்களின் கல்வி கடன், வங்கி கடன், போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன்களை பாஜக மோடி அரசு வழங்கியுள்ளது. ஆனால் யாரும் அதைப் பற்றி பேசாமல் மோடியை தவறாக சித்தரிக்கிறார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் தொழுகை இடங்களில் பாம் வைத்து நாச வேலை செய்த தீவிரவாத கும்பலை அந்த நாட்டிற்கு சென்று தீவிரவாத முகாமைத் தகர்த்தது மோடி ஆட்சியில் தான். இஸ்லாமியர்களின் நண்பராக மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளில் பாகிஸ்தானில் கரம் ஓங்கி இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் தான் இந்தியாவை நண்பராக கருதி சவுதி அரேபிய நாட்டின் மன்னர் முதல் மத்திய கிழக்காசிய நாடுகளின் மன்னர்கள் வரை இந்தியா வந்தனர். சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை மீட்கவில்லை என்று சொல்கிறார்கள், ஆனால் 67 வருடமாக சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் சேர்வதற்கு காரணமாக இருந்த காங்கிரஸ் ஆட்சியை மன்னிக்க கூடாது. நாங்கள் மக்கள் சேவைக்காக கூட்டணி அமைத்திருக்கிறோம் துரோகம் செய்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸ் ஆட்சியில் 16 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக ஒன்றும் செய்யவில்லை. 2006 தேர்தலில் 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிய திமுக , தற்போது கச்சத்தீவை மீட்போம் என்று சொல்கிறது. திமுகவின் வெற்று வாக்குறுதிகளை நம்பி விடவேண்டாம் கடலில் கூட இரண்டு ஏக்கர் நிலம் வழங்குவதற்கு திமுகவிற்கு மனசு வராது. ஜெயலலிதா எழுதி வைத்து படிக்கிறார் என்று கிண்டல் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் எழுதி வைத்தாலே படிக்க முடியாத நிலையில் இருக்கிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்ததற்கு காரணம் திமுக என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. தமிழக மக்களுக்கு சீராக மின்சாரத்தை கூட வழங்காத திமுகவிற்கு தமிழக மக்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார்கள். 5 சவரன் நகை கடனை திமுக தள்ளுபடி செய்யும் என்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறுகிறார் தள்ளுபடி செய்வதற்கு இவர் யார்?. கடை நடத்துவர்கள் தான் தள்ளுபடி செய்வார்கள் கட்சி நடத்துபவர்கள் தள்ளுபடி செய்ய மாட்டார்கள். பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்வேன் என்று கூறி வரும் ஸ்டாலின் ஒரு வீட்டிற்கு சென்று குடும்பத்தலைவனை எங்கே என்று கேட்ட போது காலை கடனை கழிக்க போயிருப்பதாக வீட்டின் தலைவி சொன்னார் அப்படியா திமுக ஆட்சிக்கு வந்தால் காலை கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவில்லாமல் கூறுகிறார். ஸ்டாலின் ஒரு கவுன்சிலர் ஆவதற்கு கூட லாயக்கற்றவர் என்று திமுக கூட்டணி கட்சியில் உள்ள வைகோ கூறியுள்ளார் பதவிக்கு வருவதற்காக ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு ஓணான் உடம்பை காட்டினாலும் தமிழக மக்கள் ஏமாறுவதற்கு தயாரில்லைலை என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.