நாகை பழைய பேருந்துநிலையம், ரயில்வே நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து வாஞ்சூர் ரவுண்டானா வரை தினமும் அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கிவருகின்றன. இந்த ஷேர்ஆட்டோக்கள் உரிய ஆவணம் இன்றி இயக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் ஆவணங்கள் இன்றி இயங்கும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய டவுன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாகூர், வெளிப்பாளையம், நாகை டவுன் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி அதிக அளவில் பயணிகளை ஏற்றியதும், உரிய ஆவணம் இல்லாமல் ஆட்டோவை இயக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து 17 ஷேர் ஆட்டோக்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.