ETV Bharat / state

லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரேஷன் அரிசி விநியோகம் பாதிப்பு - owners

நாகப்பட்டினம்: லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் தொடர் வேலை நிறுத்தத்தினால் ரேஷன் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

லாரிகள்
author img

By

Published : Jun 30, 2019, 12:35 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக ஆலை நிர்வாகம் பகுதி-1 இயந்திரத்தை இயக்காமல் நிறுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்களும், தொழிலாளிகளும் வேலையிழந்துள்ளனர்.

லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரேஷன் அரிசி விநியோகம் பாதிப்பு

மேலும், அரிசி ஆலையில் சன்னரக நெல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு இருந்தும் அதனை அரைக்காமல் ஆலை அலுவலர்கள் கமிஷன் தொகைக்காக ஈரோடு, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பிவைக்கின்றனர். இதனால் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்கா முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு செல்ல வேண்டிய ரேஷன் அரிசி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, ‘உடனடியாக அரிசி ஆலையை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவைகளை அரசிடம் ஒப்படைப்போம்’ என்றனர்.

Intro:சீர்காழி அருகே எருக்கூர் அரசு நவீன அரிசி ஆலையில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்தம் பொது விநியோக திட்டத்திற்கு செல்ல வேண்டிய ரேசன் அரிசி , விநியோகம் பாதிப்பு:-Body:நாகை மாவட்டம் சீர்காழி அருகே எருக்கூரில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது, கடந்த ஒரு மாதங்கலாக ஆலை நிர்வாகம் பகுதி-1 இயந்திரத்தை இயக்காமல் நிறுத்தியுள்ளதால் 100க்கும் மேற்ப்பட்ட லாரிகள் மற்றும் தொழிலாளிகள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் இங்கு சன்னரக நெல் 50 அயிரம் மெட்ரி டன் இருப்பு இருந்தும் அரைக்காமல் அதிகாரிகள் கமிஷனுக்காக ஈரோடு, தர்மபுரி,சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பபடுகிறது, இதனால் சீர்காழி தாலுக்கா முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு செல்ல வேண்டிய ரேசன் அரிசி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மேலும் சீர்காழி பொதுமக்களுக்கு அதிகாதிகளின் கமிஷனுக்கு ஆசைப்பட்டு சன்னரக அரிசி வழங்காமல் மோட்டரக அரிசியை வழங்கி வருவதாக குற்றசாட்டு, லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுஉள்ளனர் உடனடியாக ஆலையை இயக்க தமிழகரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் ரேசன்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவைகளை அரசிடம் ஓப்படைக்கபடும் என கூரியுள்ளனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.