நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி ரோஸி. இவர்களது இரண்டாவது மகன் மைக்கேல் (3). இவர் வீட்டின் அருகாமையிலுள்ள சிவன் கோயில் குளத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தார். இதனைக் கண்ட உறவினர்கள் குளத்தில் இறங்கி சிறுவனை தேடினர். இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேளாங்கண்ணி தீயணைப்பு வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
பின்னர், அங்குவந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை உடற்கூராய்வுக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு:
வேளாங்கண்ணி அருகிலுள்ள ரெட்டாலடி பகுதியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் முருகானந்தம் வீட்டிற்கு விருந்தாளியாக பதினெட்டு வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் வந்துள்ளார்.
அவர், முருகானந்தம் வீட்டின் அருகிலுள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!