ETV Bharat / state

சீர்காழியில் மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது! - ஜேசிபி பறிமுதல்

நாகப்பட்டினம்: சீர்காழி அருகே மண் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Apr 13, 2020, 11:37 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கு சொந்தமாக வயல் இருக்கிறது. ஐயப்பன் வயலில் திருட்டுத்தனமாக மண் எடுப்பதாக சீர்காழி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அங்கு மண் திருட்டில் ஈடுபட்டிருந்த 4 டிராக்டர்கள் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். பின் மண் திருட்டில் ஈடுபட்டதாக கூறி 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மண்திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் - ஜேசிபி பறிமுதல்

இதில் டிராக்டர் ஓட்டுநர்கள் தாமோதரன், முருகானந்தம், நாங்கூரான் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஐய்யப்பன், வெங்கடேசன், சுதாகர் ஆகிய மூன்று பேரை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீமிசல் ஆற்றில் மணல் திருட்டு: டிராக்டர் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.