குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்தப் பேரணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர்.
கொள்ளிடம் முக்கிய கடை வீதியில் தொடங்கிய பேரணி தைக்கால் பள்ளி வாசல் அருகில் நிறைவுபெற்று சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.
3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் பேரணியில் கையில் தேசியக் கொடியை ஏந்தி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பிச் சென்றனர். பேரணியைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனே மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு இதனை நடைமுறைப்படுத்தாமல் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி அங்கு கூடியிருந்த மூன்றாயிரம் பேரும் தங்களது செல்போன் டார்ச் லைட் அடித்து எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
இதையும் படிங்க : அரசு வேலை கிடைக்காததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த நபர்!