தமிழ்நாடு அரசின் சார்பில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இம்முகாமிற்கு தமிழகமெங்கும் உள்ள பல்வேறு கோயில்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்தாண்டு தமிழக அரசின் உத்தரவுப்படி, யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி வனப்பகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் (சனீஸ்வர பகவான்) ஆலயத்திலுள்ள ப்ரக்குருதி எனும் பிரணாம்பாள் பெண் யானை சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக ஆலயத்தின் முன்பு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு யானையை வழியனுப்பி வைத்தனர்.