ETV Bharat / state

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்: அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

நாகப்பட்டினம்: தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையின் 106ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

author img

By

Published : Feb 22, 2020, 5:40 PM IST

thillaiyadi valliyammai memorial day honoured by ministers
thillaiyadi valliyammai memorial day honoured by ministersthillaiyadi valliyammai memorial day honoured by ministers

நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடியில் தியாகி, தில்லையாடி வள்ளியம்மையின் நினைவு மண்டபம் உள்ளது. தில்லையாடி வள்ளியம்மை சிறு வயதிலேயே தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த நிறவெறிக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த பெருமைக்குரியவர் ஆவார்.

இன்று வள்ளியம்மையின் 106ஆவது நினைவு தினத்தையொட்டி தில்லையாடியில் உள்ள நினைவு மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவு தின அனுசரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு வள்ளியம்மையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தில்லையாடி வள்ளியம்மை நினைவு தினம்

இதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதி ஆகியோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். திமுக சார்பில் செம்பனார்கோவில் ஒன்றியத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க: ’முன்பிணை மனுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.