நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் 29 வயதான இளைஞர், பக்கிரிசாமி. மதுப் பிரியரான இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டு மாதங்கள், மது குடிக்காமல் இருந்துள்ளார். ஊரடங்கில் ஏற்பட்ட தளர்வுகள் காரணமாக, மதுக்கடைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி, மது வாங்கி அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.
இதனால், போதை தலைக்கேறிய பக்கிரிசாமி, தான் குடித்த மதுப்பாட்டிலை தனது ஆசனவாய்க்குள் நுழைத்து செருகியுள்ளார். இதில் பாட்டில் முழுவதும் வயிற்றுப்பகுதிக்குள் சென்றுவிட, கடந்த மூன்று நாட்களாக வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் வீட்டருகே வசிப்பவர்கள், நாகை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பக்கிரிசாமியின் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில் முழுபாட்டிலும் வயிற்றுப்பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தனர். பின்னர் பக்கிரிசாமிக்கு ஆசனவாய் வழியாக இனிமா கொடுத்து, 2 மணி நேரப்போராட்டத்திற்குப் பின், முழு பாட்டிலையும் வெளியில் எடுத்து, காயமின்றி அந்நபரைக் காப்பாற்றியுள்ளனர்.
அறுவை சிகிச்சையின்றி ஆசனவாயிலிருந்த மதுப்பாட்டிலை வெளியே எடுத்து மருத்துவர்கள் இளைஞரைக் காப்பற்றிய சம்பவம், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திரையரங்கில் படம் காட்டச் சொல்லி தகராறில் ஈடுபட்ட மூவர் கைது!