மயிலாடுதுறை: தற்போது சம்பா தாலடி நடவு பணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் 2.20 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா தாலடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாற்றுகள் தயார் செய்யப்பட்டு நடவு பணிகள் பல்வேறு இடங்களில் தொடங்கியுள்ளன.
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் வெயிலில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக நடவு பாட்டு பாடியபடி உற்சாகத்துடன் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் நடைபெற்ற துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு!