இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதனடிப்படையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு நேரத்தில் பொதுப்போக்குவரத்து நிறுத்திவைக்கப்படும் என்றும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு சுய ஊரடங்கு தொடங்கியதையடுத்து காலை 9 மணி முகூர்த்தத்தில் நடைபெறவிருந்த நாகையை சேர்ந்த ராஜபிரபு -நீலாம்பாள் ஆகியோரின் திருமணம் அதிகாலை 5 மணிக்கெல்லாம் நடந்து முடிந்தது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவில் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதையடுத்து அரசின் உத்தரவை மதித்து மணமக்கள், அவர்களது உறவினர்கள் காலை 6 மணிக்கு அவசர அவசரமாக மண்டபத்தை காலி செய்தனர்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் தொடங்கியது 'மக்கள் ஊரடங்கு'