ETV Bharat / state

நகராட்சி நிர்வாகத்தின் திடீர் முடிவு: அம்மா உணவகத் தொழிலாளர்கள் கவலை!

நாகப்பட்டினம்: அம்மா உணவகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை நகராட்சி நிர்வாகமானது, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் செலுத்துமாறு நிர்பந்தித்துள்ளது.

அம்மா உணவகத் தொழிலாளர்கள்
அம்மா உணவகத் தொழிலாளர்கள்
author img

By

Published : Jun 24, 2020, 3:57 PM IST

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் குறைந்த விலையில் வழங்கப்படும் உணவால் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமானோர் பயனடைந்தனர். நாள் ஒன்றுக்கு ரூ. 250 சம்பளத்தில் 12 தொழிலாளர்கள் இந்த உணவகத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த உணவகம் நாளொன்றுக்கு 3,600 ரூபாயை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

எனவே இந்த உணவகத்தில் காலை, மதியம் உணவு விற்பனை ஆவதை கொண்டு நகராட்சி நிர்ணயித்த 3600 ரூபாயை தினம்தோறும் செலுத்தி வந்தனர். இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வரத்து குறைந்துள்ளதால் விற்பனையும் சரிந்துள்ளது. கடந்த மாதங்களில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்கியதால், பற்றாக்குறை இல்லாமல் செயல்பட்டுவந்த அம்மா உணவகம், கடந்த 1ஆம் தேதி முதல் விற்பனை குறைவு காரணமாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியவில்லை.

அம்மா உணவகத் தொழிலாளர்கள்
அம்மா உணவகத் தொழிலாளர்கள்

எனவே, இத்தொகையை செலுத்த நகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களை நிர்பந்தித்துள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் விற்பனையாகும் தொகையுடன் தங்களது கையில் உள்ள பணத்தையும் போட்டு நகராட்சி நிர்வாகத்திற்கு 3,600 ரூபாயை நாள் தவறாமல் செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் தொழிலாளர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். மீண்டும் விற்பனை அதிகரிக்கும்வரை நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த தொகையைவிட்டு விற்பனையாகும் பொருளுக்கு ஏற்றவாறு தொகையை வசூலிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: ரூ.15 லட்சத்தை நெருங்கிய அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.