ETV Bharat / state

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயூர நாட்டியாஞ்சலி!

author img

By

Published : Mar 10, 2021, 2:12 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு நாள்கள் நடைபெறும் 15ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (மார்ச் 10) நடைபெற்றன.

மயூர நாட்டியாஞ்சலி
மயூர நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரியை முன்னிட்டு, மாயூர நாதர் ஆலயத்தில் நடைபெற்ற 15ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி இரண்டாம் நாளான இன்று (மார்ச் 10) நடந்த கலை விழாவில் கோவை, சேலம், வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பரதக்கலைஞர்களின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

மயூர நாட்டியாஞ்சலி

நாட்டிய நிகழ்வுகள்

இதில் மயிலாடுதுறை ஶ்ரீ சண்முகா நாட்டியப் பள்ளி குழுவினரின், பாரம்பரிய வழியில் சிவபக்தி என்ற நாட்டியத்தையும், சேலம் ஐஸ்வர்யா ஐயர் “உள்ளம் உருக்கும் ஐயனின் நாமம்” என்ற நாட்டியத்தையும், வாலாஜா லாஸ்யா டான்ஸ் அகாடமி குழுவினர் “பக்தனின் பார்வையில் ஆனந்த தாண்டவம்” என்ற நாட்டிய நிகழ்வையும், சேலம் ஜதீஸ்வரம் டான்ஸ் அகாடமி குழுவினர் “சதங்கை பாடும் ஐயனின் பாதம்” என்ற நாட்டியத்தையும், கோவை ராஜாமணியம்மாள் கலை கூட குழுவினர் “கொஞ்சும் சலங்கை” நாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர்.

இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை பலரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க:மகா சிவராத்திரி: மயூர நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.