நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்ட நிலையில் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால், தர்காவில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனையறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், அங்கிருந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கினார்.
உணவு வழங்குவதற்கு முன்பாக அவர்களைக் கை கழுவ சொல்லியும், இலவசமாக மாஸ்க் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து நாகூர் தர்கா காவல் பணியாளர்களிடம் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேயமிக்க செயலை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.