ETV Bharat / state

கடனைச் செலுத்த தரக்குறைவாகப்பேசிய மகளிர் சுய உதவிக்குழு ஊழியர்கள்; தம்பதி தற்கொலை முயற்சி! - மகளிர் சுய உதவிக்குழு

மயிலாடுதுறை அருகே மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தவணைத்தொகையை திரும்ப செலுத்தக்கோரி ஊழியர்கள், தகாத வார்த்தையைப் பயன்படுத்தி பேசியதால் மனமுடைந்த தம்பதியினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தரக்குறைவாகப் பேசிய மகளிர் சுய உதவிக்குழு ஊழியர்கள் ; தம்பதி தற்கொலை முயற்சி...!

author img

By

Published : Oct 11, 2022, 6:58 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா பழவேலங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர்கள் தான் மோகன்ராஜ் - பாக்கியலட்சுமி தம்பதியினர். இந்நிலையில், தனது மகன் மற்றும் மகள் படிப்பிற்காக, நல்லத்துக்குடியிலுள்ள தனது தாயார் வீடு அருகே பாக்கியலட்சுமி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அப்போது, பாக்கியலட்சுமி, தனியார் சுய உதவிக்குழுவில் (மதுரா சுய உதவிக்குழு) 80 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சுய உதவிக்குழுவில் பெற்ற கடனின் தவணைத்தொகையை(மாதம்தோறும் ரூ.710) திரும்ப கேட்பதற்காக அந்நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் நேற்று மோகன் ராஜின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது பாக்கியலட்சுமி உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்ததால், மறுநாள் பணத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

ஆனாலும், ஊழியர்கள் வற்புறுத்தியதாலும் தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அவமானம் தாங்க முடியாத பாக்கியலட்சுமி வீட்டிலிருந்த ஆல்-அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்தத் தகவலை அறிந்து வீட்டுக்கு வந்த மோகன்ராஜ் மனைவி தற்கொலை முயற்சி செய்ததை அறிந்து அவரும் கொசு மருந்து அருந்தி, தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரக்குறைவாகப் பேசிய மகளிர் சுய உதவிக்குழு ஊழியர்கள் ; தம்பதி தற்கொலை முயற்சி...!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க: ஆடு, மாடு கொட்டகைகள் அமைத்த திட்டத்தில் பல லட்சம் முறைகேடு - சமூக ஆர்வலர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.