ETV Bharat / state

ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டு ஆதாரமில்லாதது: வசந்தகுமார் எம்.பி.

நாகப்பட்டினம்: ப.சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் மத்திய அரசு, அதில் ஒன்றுக்குக்கூட ஆதாரத்தை காட்டவில்லை என்று, மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கூறியுள்ளார்.

எச்.வசந்தகுமார்
author img

By

Published : Sep 12, 2019, 7:31 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ”வெளிநாடு சென்று முதலீடுகளை கவர்ந்து வந்ததாகக் கூறும் முதலமைச்சர் பழனிசாமி, என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பதை தெரிவிக்க வேண்டும். ப.சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் மத்திய அரசு, அதில் ஒன்றுக்குக்கூட ஆதாரத்தை காட்டவில்லை.

எச்.வசந்தகுமார்

இந்தியாவில் பெரும் முதலாளிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆனால், சிறு தொகையை பெற்றவர்களை திரும்பச் செலுத்த வங்கிகள் நிர்பந்திக்கின்றன” என்றார்.

Intro:ப.சிதம்பரம் மீது பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் மத்தியஅரசு, அதில் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கூட வழங்கவில்லை: மயிலாடுதுறையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் பேட்டிBody:நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாடு சென்று முதலீடுகளை கவர்ந்து வந்ததாக சொல்லும் தமிழக முதல்வரைக் கேட்பதற்கு எதிர்க்கட்சி தலைவருக்கு உரிமை உள்ளது. என்னென்ன புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என தெரிவிப்பது அரசின் கடமை. ப.சிதம்பரம் கைது சட்டப்படியான நடவடிக்கை என துரைமுருகன் கூறியுள்ளார். ஆனால் சட்டமே தவறாக பயன்படுத்தப்படுகிறது என நாங்கள் கூறுகிறோம். பத்து குற்றச்சாட்டுகளை சுமத்தும் அரசு, அதில் ஒரு குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தைக் கூட வழங்கவில்லை. நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படுவார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கேட்க காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிமை இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் உலக விஞ்ஞானிகளுடன் போட்டியிடக்கூடியவர்கள். இந்தியா, அமெரிக்க, ஜெர்மன் போன்ற நாடுகளை தாண்டிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, வல்லமை பொருந்திய நாடுகள் சந்திராயனில் பழுது ஏற்படுத்தி விட்டார்களோ என்ற சந்தேகம் உள்ளது. அதிமுக அரசு ஆண்டுகளை கடத்துவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற சிந்தனை அவர்களிடம் இல்லை. தற்போதைய எதிர்கட்சி நாளைய ஆளும் கட்சி ஆகும் வாய்ப்பு உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கியுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தரும் 55 சதவீத தொகையை மாணவர்களுக்கு வழங்கியிருக்கலாம். இந்தியாவில் பெருமுதலாளிகளின் வாராக்கடன் 10 லட்சம் கோடியாக உள்ளது. ஆனால் சிறுதொகையை கடன் பெற்றவர்களை திரும்பச் செலுத்த வங்கி நிர்ப்பந்திக்கிறது. விவசாயிகளுக்கு ரூ.3ஆயிரம் பென்சன் வழங்குவதாக சொல்கிறார்கள். ஆனால், அறுவடைக்கு பணம் இல்லாதபோது இந்த தொகையை வைத்து விவசாயி ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

பேட்டி: வசந்தகுமார் (கன்னியாகுமரி எம்.பி)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.