நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கப்பூரில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அபயாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள், சுற்றுச்சுவர்களில் மரம், செடி கொடிகள் முளைத்தும் கோயில் வளாகம் முழுவதும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது.
இந்நிலையில், குத்தாலம் அருகே கோமல் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கோயிலை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாணவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மரம், செடி கொடிகளை அகற்றி துாய்மை செய்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர். மேலும், மாணவர்கள் தொடர்ந்து சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாழடைந்து நிலையில் கிடக்கும் கோயில்களையும் துாய்மை செய்து பாதுகாக்கப் போவதாக தெரிவித்தனர்.