மயிலாடுதுறை: நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அவசரகால ஊர்தி அர்ப்பணிப்பு விழா மாவட்ட செயலாளர் மாலிக் தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்று அவசர ஊர்தியை அர்ப்பணித்து உரையாற்றினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும். அண்ணா பிறந்தநாளையொட்டி முன்விடுதலை செய்யப்படவுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலையில் கோவை சிறைவாசிகள் 38 பேர் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகள் முன்விடுதலையில் சாதி, மதம் பார்க்காமல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள், 38 கோவை சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்