ETV Bharat / state

மக்கள் நம்பிக்கையைப் பெற்ற கட்சி ஆம் ஆத்மி: ஓ. எஸ். மணியன்

author img

By

Published : Feb 11, 2020, 5:02 PM IST

நாகப்பட்டினம்: மக்களின் நம்பிக்கையை ஏற்கனவே பெற்றிருந்ததால்தான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது என அமைச்சர் ஓ. எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஓ. எஸ். மணியன்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாகப்பட்டினத்தில் இன்று தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் தடகளம், நீச்சல், வாலிபால், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளை தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் ஓ. எஸ். மணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இன்று நடைபெற்ற கபடிப் போட்டியைத் தொடங்கிவைத்து, கண்டுகளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக இருந்ததால்தான், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. மக்களும் மீண்டும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரை திமுகவைச் சேர்ந்த கே. என். நேரு விமர்சித்து பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”இருண்டவன் கண்களுக்கு கண்டதெல்லாம் பேய், கே.என். நேரு எங்கு பேயைப் பார்த்தாரோ தெரியவில்லை, அவருக்குள் இருக்கும் பேயை விரட்டவேண்டும். அப்போதுதான் தெளிவான பார்வை வெளிவரும்” என பதிலளித்தார்.

இதையும் படிங்க: நாகை, காரைக்கால் மீனவர்களால் தஞ்சை மீனவர்களுக்குக் கடும் பாதிப்பு

Intro:மக்களின் நம்பிக்கையை பெற்று இருந்ததால் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் வெற்றிபெற்றுள்ளது ; கெஜ்ரிவால் வெற்றிக்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் வரவேற்பு.Body:மக்களின் நம்பிக்கையை பெற்று இருந்ததால் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் வெற்றிபெற்றுள்ளது ; கெஜ்ரிவால் வெற்றிக்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் வரவேற்பு.

தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகையில் இன்று தொடங்கி நடைபெற்றது. தமிழக கைத்தரிதுறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் கபாடி போட்டியை தொடங்கி வைத்து ஆட்டத்தை கண்டுகளித்தார். தடகளம், நீச்சல், வாலிபால் ,கபாடி ,கூடைப்பந்து, உட்பட நடைபெற பல்வேறு போட்டிகளில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறியதாவது ; மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்ற கட்சியாக இருந்ததால்தான், மீண்டும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்ததற்கு காரணம். மேலும், நம்பிக்கை பெற்றதால், மக்கள் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள் என்று டெல்லியில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்தார். தமிழக முதல்வரை திமுக கே.என் நேரு விமர்சித்து பேசியதற்கு பதில் கூறிய அமைச்சர், இருண்டவன் கண்களுக்கு கண்டதெல்லாம் பேய், திமுக கே.என். நேரு எங்கு பேயை பார்த்தாரோ தெரியவில்லை, அவருக்குள் இருக்கும் பேயை விரட்டவேண்டும். அப்போதுதான் உண்மையான பார்வை வெளியே வரும். முதல்வரை விமர்சித்து பேசிய திமுக கே.என். நேரு பேச்சிற்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் விமர்சனம் செய்தார்.

பேட்டி ; ஓஎஸ்.மணியன்
கைத்தறி துறை அமைச்சர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.