ETV Bharat / state

மாணவர் நலனில் அரசுக்கு அக்கறையில்லை- முத்தரசன்

author img

By

Published : May 19, 2020, 2:56 PM IST

நாகை: மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தவுள்ளதாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

tamilnadu CPI Secretary Muthrasan about state board examination

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலி தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை ஒன்றிற்கு 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாகையில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் தமிழ்நாடு அரசு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது கண்டனத்திற்குரியது. சென்னையில் மட்டும் 6 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் எவ்வாறு தேர்வு எழுத முடியும்? என்றார்.

மேலும் பேசிய அவர், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. குடிமராமத்து பணிகள் என்பது ஆளுங்கட்சியினர் போனஸ் பெறுவதற்காக கொண்டுவந்த திட்டம். திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியினை பங்கு போட்டு கொள்வதை நிறுத்தி வெளிப்படையாக மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.