தமிழ்நாடு, ஆந்திரா, உத்திரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் துபாய், சார்ஜாவில் தங்கி கூலி வேலை பார்த்துவந்தனர். இவர்கள் கரோனா ஊரடங்கு நடவடிக்கையால் தங்கள் வேலைகளை இழந்து, நாடு திரும்ப முடியாமல் தவித்துவருகின்றனர்.
இது குறித்து தொழிலாளர்கள் 47 பேர், வாட்ஸ்அப் மூலம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தொழிலாளிகள் தரப்பில், சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் தங்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் கேட்டால் அடித்து துன்புறுத்துகின்றனர். தற்போது வேலை பார்த்த இடத்தில் இருந்து அடித்து விரட்டிவிட்டனர். இதனால் அடுத்த வேளை உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். எங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சார்ஜாவில் சிக்கித் தவிக்கும் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த 3 கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தினர் தங்களது உறவினர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர். இதற்காக, மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கு 2 எம்எல்ஏக்கள் தேர்வு!