ETV Bharat / state

தேர்தல் ஆணைய இணையதளத்தில் தமிழ் புறக்கணிப்பு- சுயேச்சைகள் புகார் - சுயேச்சை வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள்

நாகை: தேர்தல் ஆணைய இணையதளங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டுள்ளதாக சுயேச்சை வேட்பாளர்கள் உதவி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்தனர்.

சுயேச்சைகள்
author img

By

Published : Mar 30, 2019, 11:03 PM IST

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாகஒன்பது பேர் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தின் மாண்பினை குறைக்கும் வகையில் தமிழ் மொழியை அங்கீகரிக்காமல், இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணித்திருப்பது மிகப் பெரும் வேதனையை உருவாக்கியுள்ளதாகவும், இணையதளத்தில் மீண்டும் தமிழ்மொழியை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுயேச்சை வேட்பாளர்கள் ஒன்பது பேர் மாவட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம், மின்னஞ்சல்களில் வாக்காளர்களுக்கான தகவல்கள்,விபரங்கள், விதிமுறைகள் மற்றும் ஆணையத்தின் அறிவிப்புகள் அனைத்தும் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் மட்டுமே இடம்பெற்றுள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

Intro:தேர்தல் ஆணைய இணையதளங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு. 9 சுயேட்சை வேட்பாளர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு

Body:மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் 10 பேர் தேர்தல் ஆணைய இணையதளங்களில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் உட்பட 27 பேர் களத்தில் உள்ளனர். இதில் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த 9 நபர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இளநீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த வேட்பாளர் ராஜா, தட்சிணா மூர்த்தி ஆகியோர் மக்களவையின் மாண்பினை குறைக்கும் வகையில் மாநில மொழிகளை அங்கீகரிக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ் மொழியை புறக்கணித்திருப்பது தமிழக மக்கள் வேட்பாளர்கள் மத்தியில் மிகப் பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மின்னஞ்சல்களில் வாக்காளர்களுக்கான தகவல்கள்,விபரங்கள், விதிமுறைகள் மற்றும் ஆணையத்தின் அறிவிப்புகள் இந்தி,ஆங்கிலம் மற்றும் ஒரு சிலவற்றில் மலையாள மொழிகளில் மட்டுமே அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தமிழ் மொழி உட்பட பிற மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது இது கண்டனத்திற்குரியது. அதேபோல் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மயிலாடுதுறை இல்லாமல் நாகை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு அப்பாற்பட்ட நாகப்பட்டினத்தில் உட்கார்ந்து கொண்டு மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பணிகளை செயல்படுத்துவதால் இந்த தொகுதி வேட்பாளர்கள் அடிக்கடி தேர்தல் துறை பணிகளுக்காக நாகை சென்று வருவது அலைச்சலும், மன உளைச்சலும், பண விரயத்தையும், ஏற்படுத்துகிறது. மேலும் வேட்பாளர்களின் பிரச்சாரப் பணிகளை பாதிக்கிறது. எனவே இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றனர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுவை அளித்தனர்.

பேட்டி: 1. ராஜா, 2. தட்சனாமூர்த்தி, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.