நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து சரக்கு விற்பனை படுவேகமாக நடைபெற்றுவருகிறது. பாட்டில் ஒன்றின் விலையாக ரூ.150 என்றும், பீர் பாட்டில் ரூ.180 என்ற விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். மேலும் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 20 முதல் ரூபாய் 30 வரை அதிக விலையை பெறுகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியக்கொல்லை என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் வில்லியநல்லூர் உத்தண்டராமன் தெருவை சேர்ந்தவர் கலைமணி(27). இவர் டாஸ்மாக் கடைக்குச் சென்று சரக்கு கேட்டபோது கூடுதல் விலைகுறித்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கலைமணி, கடையின் மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடமிருந்து ரூ.1000 பணத்தை பிடுங்கிகொண்டதுடன், அங்கிருந்த பாட்டில்களை போட்டு உடைத்தும், தடுப்புகளை சேதப்படுத்தியும் உள்ளார்.
இதில் காயமடைந்த ராமலிங்கம் மணல்மேடு காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து உடைந்த மதுபாட்டில்கள், தடுப்பிற்கு ரூ.10 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டதோடு கலைமணியைக் கைதுசெய்து காவலில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது!